Home Uncategorized இனிய பாரதி விளக்க மரியல் நீடிப்பு ஆதரவாளர்கள் கவனயீர்ப்பு போராடடம்.

இனிய பாரதி விளக்க மரியல் நீடிப்பு ஆதரவாளர்கள் கவனயீர்ப்பு போராடடம்.


கு.புஸ்பகுமர் எனும் இனிய பாரதி எனும் சந்தேக நபர் முன்னாள் கிழக்கு மாகாண உறுப்பினர் ஆவார் இவர் கைது செய்யப்பட்டு அக்கரைப்பற்று நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படடார்.


இதன் போது மாவட்ட நீதிபதியும் மேலதிக நீதவான் நீதிபதியும் ஆன பி.சிவகுமார் அவர்கள் எதிர்வரும் 05ம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு இவர் உத்தரவை பிறப்பித்துள்ளார். இவரை போலீசார் நீதிமன்றத்தில் முன்நிலைப்படுத்தியபோதே இதற்கு  உத்தரவினை பிறப்பித்துள்ளார்.


இவருக்கு எதிரான வழக்காக திருக்கோவில் பிரதேச பகுதியில் ஒருவரை கடத்தியதாக சம்பவம் தொடர்பாகவே இவரை கைதுசெய்து விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



2008ம் ஆண்டு 9ம் மாதம் 12ம் திகதி இக்கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அறியப்பட்டுள்ளது.




இவரை 2016ம் ஆண்டு மேமாதம் 5ம் திகதி பாதுகாப்பு அமைச்சுக்கு வழங்கிய முறைப்பாட்டுலேயே சந்தேக நபரான கு.புஸ்பகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.



மற்றும் இவரை  நீதிமன்றத்தில் முன்நிலைப்படுத்தும் நேரத்தில் இவரது ஆதரவாளர்கள் இவரை விடுவிக்ககோரி பதாதைகள் ஏந்தி இனிய பாரதியை விடுதலை செய்யக்கோரி கவனயீர்ப்பு போராடடம் ஒன்றும் நடைபெற்றுள்ளது.


MORE VACANCY  Srilanka Airlines-security Assistant