Home gazette வர்தகமானி அறிவித்தல்

வர்தகமானி அறிவித்தல்

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் மேற்பார்வை முகாமைத்துவ உதவியாளர் (தொழில்நுட்ப) சேவைப் பிரிவின் இலங்கைத் தொழில்நுட்ப சேவையின் ஆம் தர தொழில்நுட்ப அலுவலர் பதவிக்கு ஆட்சேர்ப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சை-2019.தொகைமதிப்புஇ புள்ளிவிபரத் திணைக்களத்தில் மேற்படி பதவிக்கு ஆட்சேர்ப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சையின் பொருட்டு தகைமைகளைப் பஷுர்த்திசெய்துள்ள இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

இப்பரீட்சைஇ பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் 2020இ மே மாதம் கொழும்பு மாவட்டத்தில் நடாத்தப்படும். இந்த பரீட்சையினைப் பின்போடுவதற்கு அல்லது இரத்துச் செய்வதற்கு தொகை மதிப்பு புள்ளிவிபரப் பணிப்பாளர் நாயகம் அவர்களுக்கு அதிகாரம் உண்டு. பரீட்சையின் பொருட்டு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி – 2020.03.13 ஆகும்.

 

 

சேவையில் அமர்த்துவதற்கான நிபந்தனைகள்

அரசாங்க சேவையின் நியமனங்களை கட்டுப்படுத்தும் பொது நிபந்தனைகளுக்கும் இலங்கைச்சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 1589 -30 ஆம் இலக்க 2009.02.20 ஆந்திகதிய அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட அரசாங்க சேவை ஆணைக்குழுவின்நடைமுறை விதிகளுக்கும்இ தாபனவிதிக்கோவையின் ஏற்பாடுகளுக்கும் நிதி ஒழுங்குவிதிகள்மற்றும் தொகைமதிப்புஇ புள்ளிவிபரத் திணைக்களத்தின் மேற்பார்வை முகாமைத்துவ உதவியாளர்தொழில்நுட்ப) சேவைப் பிரிவூ பொருட்டான ஆட்சேர்ப்புத் திட்டத்தின் ஏற்பாடுகளுக்கும்இஅவற்றிற்கு செய்யப்பட்டுள்ள அல்லது எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவூள்ள திருத்தங்களுக்கும்அமைய தெரிவூசெய்யப்படும் விண்ணப்பதாரர் மேற்படி பதவிகளுக்கு நியமிக்கப்படுவர்.

MORE VACANCY  Government Gazette Released- அரச வர்த்தமானி

 

இப்  பதவி நிரந்தரமானது ஓய்வுதிய உரித்துடையதுமாகும். ஓய்வுதியத் திட்டம் தொடர்பில்அரசாங்கத்தினால் எதிர்காலத்தில் எடுக்கப்படும் கொள்கைசார் தீர்மானத்திற்கு நியமனம்பெறுபவர் கீழ்படிதல் வேண்டும்.மேலும் ,விதவைகள்,அநாதைகள் ஓய்வுதியத் திட்டத்திற்குதபுதாரர் அநாதைகள், ஓய்வுதியத் திட்டத்திற்கு பங்களிப்பு செய்தல் வேண்டும். அரசாங்கத்தினால்காலத்திற்கு காலம் விதித்துரைக்கப்படும் விதத்தில் நியமனம் பெறுபவர் பங்களிப்புத் தொகையைசெலுத்துதல் வேண்டும்.

கல்வித் தகைமைகள் :

தமிழ் சிங்களம் ஆங்கில மொழிஇ விஞ்ஞானம்இ கணிதம் மற்றும் மேலும் ஒரு பாடத்துக்கு
திறமைச் சித்திகளுடன் ஒரே அமர்வில் ஆறு (06) பாடங்களில் கல்விப் பொதுத் தராதர
(சாதாரண தரப்) பரீட்சையில் சித்தியடைந்திருத்தல்.கல்விப் பொது தராதர (உயர் தரப்) பரீட்சையில் விஞ்ஞான (உயிரியல்ஃ கணிதம்
(பௌதிகவியல்) தொழில்நுட்பவியல் பாடப்பிரிவூக்குரிய மூன்று பாடங்களில் ஒரே அமர்வில்
சித்தியடைந்திருத்தல். (பழைய பாடத்திட்டத்தின் கீழ் நான்கு பாடங்களில் ஒரே அமர்வில்
சித்தியடைந்திருத்தல்.)

 

 

தொழிற்றுறை தகைமைகள் :

மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் அல்லது அம்பாறை ஹாடி நிறுவனத்தினால்
வழங்கப்படுகின்ற தேசிய தொழில்நுட்ப டிப்ளோமா (சிவில்)
அல்லது

MORE VACANCY  Ministry of Health Vacancies

தேசிய பயிலுநர்இ கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபையினால் வழங்கப்படுகின்ற தேசிய
பொறியியல் டிப்ளோமா (சிவில்)
அல்லது

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படுகின்ற தேசிய தொழில்நுட்ப
டிப்ளோமா (சிவில்)
அல்லது
கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சினால் வழங்கப்படுகின்ற தேசிய உயர் பொறியியல்
டிப்ளோமா (சிவில்)

அல்லது

இலங்கை பொறியியல் நிறுவகத்தினால் நடாத்தப்படுகின்ற பொறியியல் பரீட்சையின் 1 ஆம்
பகுதியை வெற்றிகரமாக பஷுர்த்திசெய்திருத்தல் (சிவில்)
அல்லது

தொழில் துறைக்கு ஏற்புடைய தேசிய தொழிற் தகைமை NVQ/ vV1 மட்டத்திலான
தகைமையைப் பூர்த்திசெய்திருத்ததல் வேண்டும்

வர்க்கமானி தரவிறக்கம் செய்யுங்கள்