Home topusefulinfo வாழைப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

வாழைப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

357
வாழைப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
வாழைப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

வாழைப்பழத்தை கனிந்ததாகவே வாங்கினால், அது சீக்கிரம் பாழாகிவிடும். ஆகவே சிலர் காயாக வாங்குவார்கள். வாழைப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்அத்தகையவர்கள் அதனை விரைவில் பழுக்க வைப்பதற்கு ஒரு சூப்பர் டிப்ஸ் உள்ளது. அது என்னவென்றால், அதனை ஒரு ப்ரௌன் பேப்பரில் போட்டு சுற்றிவிட்டால், சீக்கிரம் பழுத்துவிடும். மேலும் சிலர் ப்ரிட்ஜில் வைப்பார்கள். அவ்வாறு வைத்தால், அது கருப்பாக மாறிவிடும்.

வாழைப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்வாழைப்பழத்தில் இருக்கும் வைட்டமின் சி மாங்கனீஸ் உப்புடன் சேர்ந்து உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. இதனால் உடலில் எந்த ஒரு காய்ச்சல் ஏற்பட்டாலும் உடனடியாக குணமடைவதற்கு உதவுகிறது.

வாழைப்பழத்தில் பொட்டாசியம் சத்து இருப்பதால் உடலில் இருதயம் சம்பந்தமான நோய்கள் வராமல் பாதுகாக்கிறது. குறிப்பாக இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்களில் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் சீராக இயங்க உதவுகிறது.காய்ச்சல் சமயத்தில் இரண்டு அல்லது மூன்று வாழைப் பழங்களை சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகும்.

வாழைப்பழம் மென்மையாகவும் வழுவழுப்பாகவும் இருப்பதால், குடலில் ஏற்படும் கோளாறுகளுக்கு, நல்ல உணவாக பயன்படுகிறது. வாழைப்பழம் அதிக அமிலத்தன்மையைச் சரிசெய்வதோடு, புண் ஏற்பட்ட இடத்தில் ஒரு பாதுகாப்பு ஏற்படுத்துகிறது.

வாழைப்பூவை சமைத்து சாப்பிட்டால், அது மாதவிடாய் பிரச்சனைகளை குணமாக்க பெரிதும் உதவும். நம்முடைய உடலில் சுரக்க கூடிய திரவத்தை சமநிலைப்படுத்துகிறது. உடம்பில் உள்ள செல்களை தூய்மையாகவும் நல்ல ஊட்டச்சத்துடனும் வைத்து கொள்கிறது.

வாழைப்பழத்தில் காணப்படும் நார்ச்சத்துகள் குடலை சீராக வைக்கிறது. வாழைப்பழத்துடன் பால் கலந்து சாப்பிட்டாலோ அல்லது தேன் கலந்து சாப்பிட்டாலோ அவை வயிற்று சம்பந்தமான நோய்களை குறைக்கிறது. அதிலும் அதிகப்படியான இரத்தப் போக்கால் அவஸ்தைப்படுபவர்கள், வாழைப்பூவை சாப்பிட்டால், புரோஜெஸ்ட்ரோனின் அளவு அதிகரித்து, அதிகப்படியான இரத்தப் போக்கு குறையும்.

banana
banana

வாழைப்பழங்களில் இயற்கையில் அமிலங்கள் இருக்கின்றன. எனவே இது வயிற்று பிரச்சனைக்கு காரணமாக அமையலாம் என்றும் வெறும் வயிற்றில் வாழைப்பழத்தை எப்போதுமே சாப்பிடாமல் தவிர்த்தல் நல்லது என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால், குடல் கோளாறான நாள்பட்ட அல்சர் பிரச்சனை எளிதில் நீங்கிவிடும். அதிலும் நன்க கனிந்த பழத்தை சாப்பிட்டால், புண்ணுடன் கூடிய குடல் அலற்சியையும் குணமாக்கும். மேலும் செரிமானமும் சீரான நடைபெறும்.இனி வெறும் வயிற்றில் எப்போதுமே வாழைப்பழத்தை சாப்பிடாதீர்கள்

MORE VACANCY  இலவசமான ஒன்லைன்அதிகளவு சேமிப்பு வசதி அனைவருக்கும்.