Home Government vacancy Government job vacancies Agriculture Instructor-open Exam Eastern Vacancy-2021

Agriculture Instructor-open Exam Eastern Vacancy-2021

Agriculture Instrucror-open Exam Eastern Vacancy-2021
Agriculture Instrucror-open Exam Eastern Vacancy-2021

Agriculture Instructor-open Exam Eastern Vacancy-2021

கிழக்கு மாகாண பொதுச் சேவையின் விவசாயப்போதனாசிரியர், தரம் III இற்கு மாகாண ரீதியான புள்ளிகளின் முன்னுரிமை வரிசைஅடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சை – 2021 கிழக்கு மாகாண பொதுச் சேவையின் விவசாயப் போதனாசிரியர், தரம் III பதவிக்கு மாகாண ரீதியாக பெறப்படும் புள்ளிகளின் முன்னுரிமை வரிசை அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சைக்காக கீழே குறிப்பிடப்பட்ட தகைமைகளை பூர்த்தி செய்த கிழக்கு மாகாணத்தை நிரந்தர வதிவிடமாகக் கொண்டோரிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித்திகதி 2021.03.31 ஆகும்.

இப்பரீட்சை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் இறுதித்திகதிக்கு பின்னர் விரைவில் கிழக்கு மாகாணத்தின் நான்கு நகரங்களில் கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளரால் நடாத்தப்படும். 2. ஆட்சேர்ப்புக்கான சேவை நிபந்தனைகள்: 2.1. இப்பதவி நிரந்தரமானதாகும். தங்களுக்குரிய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக அரசினால்
எதிர்காலத்தில் வகுக்கப்பட்டு மேற்கொள்ளப்படும் கொள்கை ரீதியான தீர்மானங்களுக்கு தாங்கள் கீழ்ப்படிதல் வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட ஆட்சேர்ப்புத் திட்ட விதிகளுக்கு அமைய சேவை நிபந்தனைகள் தீர்மானிக்கப்படும். இவ்வறிவித்தலுக்கமைய விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்காக செயலாளர், கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் நடாத்தப்படும் எழுத்து மூல போட்டிப்பரீட்சையில் பெற்றுக்கொள்ளப்படும் மொத்தப்புள்ளிகளின் முன்னுரிமை வரிசை அடிப்படையில்

MORE VACANCY  இலங்கை நிலக்கரி கம்பெனி பிரைவேட் லிமிடெட் பதவி வெற்றிடம்

நேர்முகப்பரீட்சையின் மூலம் நிலவுகின்ற வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படும். 2.3. இந்நியமனம் பெறுபவர்கள் கிழக்கு மாகாணத்தின் எப்பாகத்திலும் சேவையாற்றத் தயாராக
இருத்தல் வேண்டும் என்பதோடு கிழக்கு மாகாணத்தில் 10 வருடங்கள் கட்டாயமாக சேவையாற்றுதல் வேண்டும். மேலே குறிப்பிடப்பட்ட பதவிக்குரிய தகைமைகளை பூர்த்தி செய்த கிழக்கு மாகாண சேவையில் ஏற்கனவே உள்ளவர்கள் விண்ணப்பிப்பதாயின் திணைக்களத்தலைவரூடாக விண்ணப்பித்தல் வேண்டும்.

அவ்வாறு விண்ணப்பிக்கும் போது மேலே குறிப்பிட்ட பதவிக்கு விண்ணப்பதாரி தெரிவு செய்யப்படுமிடத்து அவரை குறித்த பதவிக்கு விடுவிக்க முடியும் என அத்திணைக்களத்தலைவர் உறுதிப்படுத்தல் வேண்டும் என்பதுடன், திணைக்களத்தலைவரினால் விடுவிப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்படாத விண்ணப்பப்படிவங்களை சமர்ப்பிக்கும் விண்ணப்பதாரிகள் இப்பதவிக்கு தெரிவு
செய்யப்படுமிடத்து, இது அவர்களது புது நியமனமாகக் கருதி நடவடிக்கை எடுக்கப்படும்.
.
தகைமைகள் :  பொதுவான தகைமைகள் :

இலங்கைப் பிரஜையாக இருத்தல் வேண்டும்.

சிறந்த நல்லொழுக்கமும் சிறந்த உடல் உள ஆரோக்கியமும் உடையவராக இருத்தல்
வேண்டும்.
இப்பதவிக்கு
மதச்சார்புடைய பிரிவினை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆள் ஒருவர்
விண்ணப்பிப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

MORE VACANCY  Northern Province - Graduate Teaching ,Combined Maths, Physics, Chemistry, Biology, General English

2021.03.31ஆந் திகதியன்று 18 வயதுக்குக் குறையாதவராகவும் 30 வயதுக்கு
மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப முடிவுத் திகதிக்கு உடன் முன்னரான ஒரு (01) வருடத்தில் தொடர்ச்சியாக கிழக்கு
மாகாணத்தில் வசித்திருத்தல் வேண்டும்.
அல்லது
விண்ணப்ப முடிவுத் திகதிக்கு உடன் முன்னரான மூன்று (03) வருடத்தில் தொடர்ச்சியாக கிழக்கு மாகாணத்தில் வசித்திருக்கும் ஒருவரை திருமணம் செய்து வேறு மாகாணத்திலிருந்து இந்த மாகாணத்தில் வதிவது தொடர்பாக அத்தாட்சிப்படுத்தப்பட்ட ஆவணமொன்றை சமர்ப்பிக்கக் கூடியவராயிருத்தல் வேண்டும்.
குறிப்பு:இன் கீழ் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகள் வதிவிடத்தை
அத்தாட்சிப்படுத்துவதற்காக தேருநர் இடாப்பின் உறுதிப்படுத்தப்பட்ட பிரித்தெடுப்பிதழ்களுடன் பிரதேச செயலாளரினால் மேலொப்பம் இடப்பட்ட கிராம உத்தியோகத்தர் சான்றிதழையும் நேர்முகப்பரீட்சையின் போது சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமானதாகும்.

DOWNLOAD-Tamil DETAILS

APPLICATION TAMIL