Home Government vacancy Government job vacancies Colonization Officer in Northern Province

Colonization Officer in Northern Province

வடக்கு மாகாண தொழில்நுட்பவியல் சேவையின் குடியேற்ற உத்தியோகத்தர் தரம் III
பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2021
வடக்கு மாகாண பொதுச்சேவையின் குடியேற்ற உத்தியோகத்தர் பதவிக்கு நிலவும் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சையானது வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் அவர்களால் நடாத்தப்படும் என அறிவிக்கப்படுகின்றது. விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி 07.05.2021ஆகும்.
02. ஆட்சேர்ப்பிற்கான சேவை நிபந்தனைகள் – 02.1 2017.01.01 ஆம் திகதியிலிருந்து செயல்வலுப்பெறும் வகையில் வடக்கு மாகாண கௌரவ
ஆளுநர் அவர்களால் அனுமதிக்கப்பட்ட குடியேற்ற உத்தியோகத்தர் சேவையின் சேவைப்பிரமாணக் குறிப்பில் விதந்துரைக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு அமையவும், தாபனவிதிக்கோவை ஏற்பாடுகள், நிதிப்பிரமாணங்கள் மற்றும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 1817/30ஆம் இலக்க 2013.07.03ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட வடக்கு மாகாண அரச சேவைக்கான தாபன நடைமுறை ஒழுங்கு விதிக்கோவை ஆகியவற்றிற்கு உட்பட்டு, தெரிவுசெய்யப்பட்ட பரீட்சார்த்திகள்
குறித்த பதவியின் தரம் III இற்கு நியமிக்கப்படுவர். 02.2 திறந்த போட்டிப்பரீட்சையில் சித்தி பெற்று நியமனத்திற்கு தெரிவு செய்யப்படும்
பரீட்சார்த்திகள் நியமனத்திகதியிலிருந்து மூன்று வருடங்களிற்கு தகுதிகாண் அடிப்படையில் நியமிக்கப்படுவர். இப்பதவி நிரந்தரமானதும் ஓய்வூதிய உரித்துடையதுமாகும். சேவைப் பிரமாணக்குறிப்பில் குறிப்பிடப்பட்டவாறு வடக்கு மாகாண குடியேற்ற உத்தியோகத்தர் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட திகதியிலிருந்து 03 வருட காலத்திற்குள் முதலாவது
வினைத்திறமை காண் தடைப்பரீட்சையில் சித்தியெய்தல் வேண்டும். 02.3 இச் சேவை இடமாற்றத்திற்குட்பட்ட சேவையாகும். இதனால் இந் நியமனம் பெறுபவர்கள்
வடக்கு மாகாணத்தின் எப்பாகத்திலும் சேவையாற்ற வேண்டுமென்ற நிபந்தனைக்கும்
கீழ்படிதல் வேண்டும். 02.4 நியமனங்களின் எண்ணிக்கை மற்றும் அமுலுக்கு வரும் திகதி என்பன நியமன
அதிகாரியினால் வரையறுக்கப்படும். அறிவிக்கப்பட்ட வெற்றிடங்கள் தொடர்பில் சில வெற்றிடங்கள் அல்லது சகல வெற்றிடங்களையும் நிரப்பாது விடுவதற்கான அதிகாரத்தினை நியமன அதிகாரி கொண்டுள்ளார். நியமிக்கப்படவுள்ள ஆட்களின் மொத்த எண்ணிக்கை
ஆகும். 03. சம்பள அளவுத்திட்டம் :
பொது நிர்வாகச் சுற்றறிக்கை 03/2016க்கு அமைவான, சம்பளத் தொகுதி MN 3 – 2016க்கு ஏற்ப குடியேற்ற உத்தியோகத்தர் சேவையின் தரம் – III ற்கான திரட்டிய சம்பள விகிதமானது ரூபா 31, 040 – 10x 445 – 11 x 660 – 10 x 730-10 x 750 – 57, 550/-ஆகும். (ரூபா 31,930 சம்ப ள படிநிலைக்கு முன் வினைத்திறமைகாண் தடைப் பரீட்சையில் சித்தி பெறல் வேண்டும்)
04. பொதுவான தகைமைகள் –

விண்ணப்பதாரி இலங்கைப் பிரஜையாக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரி வடக்கு மாகாணத்தின் எப்பாகத்திலும் கடமையாற்றக் கூடிய சிறந்த தேகாரோக்கியம் உள்ளவராக இருத்தல் வேண்டும் என்பதுடன் சிறந்த நன்னடத்தையும் உள்ளவராக இருத்தல் வேண்டும்.

அ) விண்ணப்பதாரி வடக்கு மாகாணத்தை நிரந்தர வதிவிடமாகக் கொண்டவராக இருத்தல் வேண்டும். இவ் விண்ணப்ப முடிவுத்திகதிக்கு முன்னர் உள்ள ஆறு (06) ஆண்டு காலப்பகுதியில் ஆகக் குறைந்தது மூன்று (03) ஆண்டுகளாயினும் வடக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக வசித்திருத்தல் வேண்டும்.
அல்லது ஆ) விண்ணப்பதாரர் அல்லது பெற்றோர் வடக்கு மாகாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டிருப்பதுடன் ஆகக்குறைந்தது ஐந்து (05) வருடங்கள் வடக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக வசித்திருத்தல் வேண்டும் (நேர்முகப் பரீட்சையின் போது தமது நிரந்தர வதிவிடத்தினை உறுதிப்படுத்துவதற்கு வாக்காளர் பட்டியலினை சமர்ப்பித்தல் வேண்டும்)

 

APPLICATION

MORE VACANCY  Internal Auditor Vacancy - National Medicines Regulatory Authority 2021