Home topusefulinfo How to make money on youtube?

How to make money on youtube?

YOUTUBE ONLINE MONEY MAKE TAMIL
YOUTUBE ONLINE MONEY MAKE TAMIL

Youtube சேனல்கள் வருமானத்திற்கு உதவாது என்று கூறுவதை விட ஆரம்ப நிலையில் உள்ள YouTube சேனல்கள் வருமானத்திற்கு உதவாது என்று கூறுவதே சரி என்று நினைக்கிறேன். ஏனெனில், நாளுக்கு நாள் Youtuber-களில் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருவதால் யூடியூப்-ம் வருடாவருடம் யூடிபில் இருந்து பணம் ஈட்டுவதற்கான அடிப்படை தகுதியை மாற்றிக் கொண்டே வருகிறது.இது தொடக்க நிலை யூடியூபர்களை பெரிதும் பாதிக்கிறது.
உதாரணமாக நீங்கள் ஒரு யூடியூப் சேனல் வைத்திருக்கிறீர்கள் என்றால் அதன்மூலம் நீங்கள் பணம் ஈட்டுவதற்கான அனுமதி (Adsense) பெற உங்களுடைய முக்கியமாக சேனலுக்கு இரண்டு தகுதி வேண்டும்.

YOUTUBE இல் இருவழிகளில் பணம் ஈட்ட முடியும்.

முதல் வழி

தங்களின் YOUTUBE சேனலில் இருக்க வேண்டிய தகுதிகள் இவை:

1000 வாடிக்கையாளர்களைப் (SUBSCRIBERS) பெற்றிருக்க வேண்டும்.
உங்களின் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்ட வலையொளிக்காட்சிகளை மொத்தமாக 12 மாதங்களில் 4000 மணி நேரத்திற்கு அதிகமாக பார்த்திருக்க வேண்டும்.
உங்களின் வலையொளிக் காட்சிகள் பிறரின் காப்புரிமை கொண்ட இசை அல்லது காட்சிகளைக் கொண்டிருக்க கூடாது.
வலையொளிக்காட்சிகள் குறைந்தபட்சம் 3 நிமிடங்களுக்கு மேல் இருந்தால் YOUTUBE விளம்பரங்களைக் கொடுக்க எளிதாக இருக்கும்.
மேற்கண்ட தகுதிகள் இருக்கும்.

youtube monetizations
youtube monetizations

வலையொளிக்காட்சிகள் கொண்ட சேனலை நீங்கள் நிர்வகித்தால் YOUTUBE தானாகவே பரிசீலித்து விளம்பரம் கொடுக்க நீங்கள் தகுதியானவர் என்று குறிப்பிடும். பின்னர் நீங்கள் எங்கு விளம்பரங்களைக் கொடுக்க வேண்டும் என்று அமைப்புகளில் மாற்றம் செய்தால் போதும்.

எனது ஒரு சேனலில் இருக்கும் நிலையினை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்… 1000 வாடிக்கையாளர்களைக் கடந்து சுமார் ஆறு மாத காலம் ஆகிவிட்டது, ஆனால் இன்னும் 4000 மணி நேரம் வலையொளிக்காட்சிகள் பார்க்கப்படவில்லை. இதே சேனல் இந்த புதிய விதிமுறைகள் வரும் முன்பு மாதம் 10$ வரையில் சம்பாதித்துக் கொடுத்தது.

இரண்டாம் வழி

உங்களின் YOUTUBE மிகவும் பிரபலமானதாக இருப்பின், நீங்களாகவே தனியாக விளம்பரங்களை எடுத்து அவற்றை சந்தைப்படுத்தலுக்கு முன் வைக்கலாம்.

உதாரணமாக நீங்கள் தற்போது பிரபலமாக இருக்கும் எந்தவொரு YOUTUBE சேனலை எடுத்தாலும் முதலில் விளம்பரத்தினைக் கூறுவார்கள். இதற்கு 3 லட்சம் பார்வைகள் உறுதியாக ஒவ்வொரு வலையொளிக் காட்சிகளும் கொடுக்க வேண்டியதாக இருக்கும் (தோராயம் மட்டுமே).

உங்களின் சேனலில் உங்கள் தொலைபேசி மற்றும் இணையதள முகவரி அல்லது மின்னஞ்சல் முகவரி கொடுத்து விளம்பரங்கள் ஏற்கப்படும் என்று கொடுத்தாலே போதும். எனக்கு தெரிந்தவறை உங்களின் சேனல் சுமார் 10 லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்டிருந்தால் நீங்கள் கேட்கமாலேயே விளம்பரம் உங்களைத் தேடிவரும். ஒரு விளம்பரத்திற்கு குறைந்த 10 ஆயிரம் முதல் வாங்கலாம்.

என்னைப் பொறுத்தவரை உங்களின் YOUTUBE சேனல் தனித்தன்மையான வலையொளிக் காட்சிகளை கொடுத்தால் மட்டுமே விரைவில் பணம் சம்பாதிக்க முடியும். முயன்று பாருங்கள்! வெற்றி ஒரு இரவில் கிடைப்பதல்லவே!

யூடியூப்பில் 100 பேர் பார்வையிட்ட காணொளிக்கு இந்தியாவில் எவ்வளவு பணம் சம்பாதிக்கலாம்? net artical

HOME PAGE

MORE VACANCY  Ministry of Health Vacancies